தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மூன்று டை ப்ரேக்கரையும் இழந்த நடால்; அரையிறுதிக்கு முன்னேறிய டாமினிக் தீம்! - ஆஸ்திரேலியன் ஓபன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் காலிறுதி சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான ரஃபேல் நடாலை வீழ்த்தி இளம் வீரர் டாமினிக் தீம் அரையிறுதிக்கு முன்னேறினார்.

upset-alert-rafael-nadal-knocked-out-of-australian-open-by-dominic-thiem
upset-alert-rafael-nadal-knocked-out-of-australian-open-by-dominic-thiem

By

Published : Jan 29, 2020, 9:31 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், பல அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தி வருகிறது. இன்றையப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ரஃபேல் நடாலை எதிர்த்து இளம் வீரர் டாமினிக் தீம் ஆடினார்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த இந்த போட்டியின் முதல் செட்டிலேயே இரு வீரர்களும் போராட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டில் 6-6 என்ற நிலை ஏற்பட, ஆட்டம் டை ப்ரேக்கருக்கு சென்றது. டை ப்ரேக்கரில் 7-3 என்ற கணக்கில் தீம் வெற்றிபெற, முதல் செட்டை 7-6(7-3) என்ற கணக்கில் தீம் கைப்பற்றினார்.

இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்திலும் இரு வீரர்களும் சரிசமமாக ஆட, மீண்டும் ஆட்டம் டை ப்ரேக்கருக்கு சென்று இரண்டாவது செட்டை 7-6 (7-4) என்ற கணக்கில் தீம் கைப்பற்ற, ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடந்த மூன்றாவது செட் ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய நடால், 6-4 எனக் கைப்பற்ற, ஆட்டம் நான்காவது செட்டிற்கு சென்றது.

நடால்

பின்னர் நடந்த நான்காவது செட் ஆட்டத்தில் நடால் - தீம் ஆகியோருக்கிடையே பொறி கிளம்பியது. இந்த செட்டின் ஒவ்வொரு புள்ளிக்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இந்த ஆட்டத்தில் மூன்றாவது முறையாக டை ப்ரேக்கர் செல்ல, இறுதியாக தீம் 7-6 (8-6) என்ற கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

உலகின் நம்பர் 1 வீரரான நடாலின் தோல்வி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற தீம், அரையிறுதியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரவை எதிர்கொள்ளவுள்ளார்.

இதையும் படிங்க: முத்தமுடன் சிறுமியிடம் மன்னிப்பு கேட்ட நடால்!

ABOUT THE AUTHOR

...view details