தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

3ஆவது முறையாக ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் விருதை வென்றார் நடால்! - பெரெட்டினிக்கு ஆண்டின் மிகவும் மேற்பட்ட வீரர்

லண்டன்: உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால், மூன்றாவது முறையாக  ஏடிபின் ஸ்டீபன் எட்பெர்க் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் விருதை பெற்று அசத்தியுள்ளார்.

Nadal wins ATP Sportsmanship Award
Nadal wins ATP Sportsmanship Award

By

Published : Dec 20, 2019, 7:17 PM IST

உலக டென்னிஸ் கூட்டமைப்பு சார்பாக, டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான ஏடிபி விருது லண்டனில் வழங்கப்பட்டது.

இதில், உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக வலம்வரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால், இந்தாண்டுக்கான ஏடிபியின் 'ஸ்டீபன் எட்பெர்க் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்' விருதை வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் இவர் தொடர்ச்சியாக இருமுறை (2018, 2019) கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். மேலும் இவர் இந்த விருதை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளார்.

மேலும் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரரான ரோஜர் ஃபெடரர், 'ஃபேன்ஸ் ஃபேவரைட்' வீரர் என்னும் விருதைப் பெற்றுள்ளார். அதேபோல், பிரிட்டிஸின் ஆண்டி முர்ரே 'கம்பேக் பிளேயர் ஆஃப் தி இயர்' விருதை தட்டிச்சென்றார்.

மேலும் இத்தாலியின் பெரெட்டினிக்கு 'ஆண்டின் அபரிமித முன்னேற்றமடைந்த வீரர்' என்னும் விருதை வழங்கி கௌரவித்துள்ளது ஏடிபி.

இதையும் படிங்க:பிக் பாஷ் லீக்: முதல் போட்டியிலேயே பட்டையை கிளப்பிய மேக்ஸ்வெல்! - மெல்போர்ன் அசத்தல் வெற்றி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details