லண்டனில் ஆடவருக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆண்டர் அகாஸ் குரூப்பில் இடம்பெற்றுள்ள உலகின் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால் கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில், சிட்சிபாஸ் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நடால் இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியில் சமநிலையை ஏற்படுத்தினார்.