கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (மார்ச் 3) நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, ஸ்லோவேனியாவின் ஆண்ட்ரேஜா க்ளெபாஸ் இணை - ரஷ்யாவின் அண்ணா பிளிங்கோவா, கனடாவின் கேப்ரியல் டப்ரோவ்ஸ்கி இணையுடன் மோதியது.
பரபரப்பான இப்போட்டின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா மிர்ஸா இணை முதல் செட்டை 6- 2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.