தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முதல் சுற்றில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் - டென்னிஸ்

ஃபுளோரிடா: மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்கு இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றுள்ளார்.

பிரஜ்னேஷ் குணேஸ்வரன்

By

Published : Mar 21, 2019, 9:24 AM IST

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், பிரட்டன் வீரர் ஜே கிளார்க்குடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-4 என்ற கணக்கில் ஜே கிளார்க்கை வீழ்த்தினார். இதன் மூலம், மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நாளை (மார்ச் 22) நடைபெறவுள்ள முதல் சுற்றுப்போட்டியில் அவர் ஸ்பெயினின் லாவ்மே முனாருடன் (Jaume Munar) மோதவுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியன்வெல்ஸ் ஓபன் தொடரில், இவர் மூன்றாம் சுற்றுப்போட்டி வரை தாக்குப்பிடித்தார். அதைத்தவிர, அந்த தொடரில் 18ஆம் நிலை வீரரான நிக்கோலோஸ் பஷிலாஸ்விலியை அவர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details