ஆடவருக்கான டென்னிஸ் ஒற்றையர் சுற்று தரவரிசைப் பட்டியலை ஏடிபி வெளியிட்டது. இதில், இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
75 ஆவது இடத்தில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் - 75 ஆவது இடத்தில் பிரேஜ்னேஷ் குணேஸ்வரன்
டெல்லி: ஆடவருக்கான ஏடிபி டென்னிஸ் தரவரசை பட்டியலில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 75ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பிரேஜ்னேஷ் குணேஸ்வரன்
கடந்த வாரம் சீனாவின் அன்னிங்கில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் சுற்றில், இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் இரண்டாம் இடத்தை பிடித்தார். இதன் மூலம், ஆடவருக்கான டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 80 ஆவது இடத்தில் இருந்த அவர் தற்போது ஐந்து இடங்கள் முன்னேறி 75ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் செர்பியாவின் ஜோகோவிச் முதலிடத்திலும், ஸ்பெயினின் ரஃபேல் நடால் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.