தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கொட்டும் பனியிலும் பயிற்சியை மேற்கொள்ளும் ஃபெடரர்!

கோவிட்-19 பெருந்தொற்றினால் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் தனது பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

Practicing Social Distancing: Federer shows off his trick shots
Practicing Social Distancing: Federer shows off his trick shots

By

Published : Mar 31, 2020, 12:32 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் ஏழரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 37ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஊயிரிழந்தும் உள்ளனர். மேலும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுவிச்சர்லாந்தின் டென்னிஸ் ஜான்பவான் ரோஜர் ஃபெடரர், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள காணொலியில், ”என்னுடைய தனித்துவமான ஷாட்கள் இன்னும் என் நினைவில் இருப்பதை உறுதிப்படுத்துகிறேன்”, எனப் பதிவிட்டு பயிற்சியில் ஈடுபடும் காணொலியையும் வெளியிட்டுள்ளார்.

கரோனா பெருந்தொற்றுக் காரணமாக இந்தாண்டு மே மாதம் நடைபெறவிருந்த பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் நடைபெறவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாக தகவல்வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா: ஒரே வாரத்தில் ரூ. 1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா!

ABOUT THE AUTHOR

...view details