ஜூஹாய் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிரான்சு நாட்டின் அட்ரியன் மன்னாரினோ ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ் வினோலாஸை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்தப் போட்டியில் அட்ரியன் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஆல்பர்ட்டை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பிரான்சு நாட்டின் அட்ரியன் மன்னாரினோ ஜூஹாய் சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ராபர்டோ பாடிஸ்டா அகுட் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ்-டி-மினோரை எதிர்கொண்டார்.