சீனாவின் ஹுபெய் நகரில் மகளிருக்கான வுகான் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸின் ஆர்யனா சபாலெங்கா, அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு வீராங்கனைகளும் சமபலத்துடன் மோதினார். இப்போட்டியின் முதல் செட்டை ஆர்யனா 6-3 எனக் கைப்பற்ற, இரண்டாவது செட்டை அலிசன் 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இதனால் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது. இறுதியில் மூன்றாவது செட்டை ஆர்யனா சபாலெங்கா 6-1 என கைப்பற்றி அலிசனை அதிரடியாக வீழ்த்தினார்.