யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி நட்சத்திர வீரராங்கணையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் உக்ரைனின் எலினா ஸ்விடொலினாவை எதிர்கொண்டார்.
#USOpen2019: 24வது முறையாக பட்டத்தை வெல்வாரா செரினா? - title winner
யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.
#USOpen2019
வழகம்போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய செரினா வில்லியம்ஸ் 6-3, 6-1 என்ற செட்கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தினார். இதன் மூலம் இவர் யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இதற்குமுன் செரினா வில்லியம்ஸ் டென்னிஸ் போட்டிகளில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.