#RolexShMasters: சீனாவில் நடைபெற்று வந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த இறுதி ஆட்டத்தில் தனது அனைத்து விதமான யுக்திகளையும் கையாண்ட மெத்வதேவ் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி, ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.