ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவின் தலைநகரமான ஷாங்காயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சுவிச்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் ஸ்பெயின் நாட்டின் ஆல்பர்ட் ரமோஸை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் ஆல்பர்டிடமிருந்து கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிற்கான போட்டியிலும் அதிரடியைத் தொடர்ந்த ஃபெடரர் 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி ஆல்பர்டிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் ரோஜர் ஃபெடரர் 6-2, 7-6 என்ற நேர்செட்டில் ஆல்பர்ட் ரமோஸை வீழ்த்தி ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க: ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய ஆண்டி முர்ரே!