சீன ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரமான பெய்ஜிங்கில் நடைபெற்றுவருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்த்திரியாவின் நட்சத்திர வீரரான டோமினிக் தீம், ரஷ்யாவின் கரேன் கச்சனோவாவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் டோமினிக் தீம் 2-6, 7-6, 7-5 என்ற செட் கணக்குகளில் கரேன் கச்சனோவாவை வீழ்த்தி சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி டச் நாட்டின் கிகி பெர்டென்ஸை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆஷ்லே 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்குகளில் கிகியை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆஷ்லே பார்டி, சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: முடிஞ்சா என்னை தடுத்துப் பாருங்க... பார்சிலோனா இளம் வீரரின் அசால்ட் கோல்!