சீன ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரரான டோமினிக் தீம், கிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் முதல் செட் கணக்கை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி தீம்மிற்கு அதிர்ச்சியளித்தார். அதன்பின் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோமினிக் தீம், இரண்டாவது செட் கணக்கை 6-4 என்ற புள்ளிகணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பைக் கூட்டினார்.