சீன ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் நட்சத்திர வீரர் ஜான் இஸ்னர் இங்கிலாந்தின் டான் எவன்ஸை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இஸ்னர் 7-6, 7-5 என்ற நேர் செட்கணக்குகளில் டான் எவன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அமரிக்காவிக் ஜான் இஸ்னர் சீன ஓபன் காலிறுதிச்சுற்றுக்கு தேர்ச்சிப் பெற்றுள்ளார்.