ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற வைல்டு கார்டு சுற்றில் உலகின் முன்னணி நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜப்பானின் கோ சொய்டாவை(Go Soeda) எதிர்கொண்டார்.
#Japanopen: 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்' - அதிரடி காட்டிய ஜோகோவிச்! - காலிறுதிச்சுற்றில் ஜோகோவிக்
டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் வைல்டு கார்ட் என்ட்ரீ மூலம் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
#Japanopen
இந்த ஆட்டத்தின் முதல் செட் கணக்கை ஜோக்கோவிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி சொய்டாவிற்கு அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது செட் கணக்கையும் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர் செட்கணக்கில் கோ சொய்டாவை வீழ்த்தினார்.
இந்த வைல்ட் கார்டு போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் செர்பியாவின் ஜோகோவிச் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்ச்சியடைந்துள்ளார்.