#RolexShMasters : சீனாவில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை கனடாவின் டெனிஸ் ஷபோவாலா எதிர் கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஷபோவாலோவை திணறடித்தார். இதன் மூலம் நோவாக் ஜோகோவிச், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஷபோவாலோவை வீழ்த்தினார்.