சீன ஓபன் டென்னிஸ் தொடர், அந்நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடை பெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி உலகின் நான்காம் நிலை வீரரான ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்டி முதல் செட் கணக்கை 6-3 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றினார். ஆனால் அவரது தொடக்கம் போல அவரின் முடிவு அவருக்குச் சாதகமாக அமையவில்லை.
ஜப்பானின் நவோமி எதிர்பாராத விதமாக இரண்டாவது செட்டை 6-3 எனக் கைபற்ற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நவோமி மூன்றாவது செட்டை 6-2 என்ற அடிப்படையில் கைப்பற்றி, உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லேவுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் ஜப்பானின் நவோமி ஒசாகா சீன ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்குகளில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார்.
இதையும் படிங்க: #chinaopen2019: 'அனல் பறக்க வைத்த ஆண்டி முர்ரே, திணறடித்த தீம்' - அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!