2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இன்றைய நாள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இன்று நடந்த போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறியதால், நவோமி ஒசாகா - கோகோ காஃப் வீராங்கனைகளுக்கு இடையிலான போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த வீராங்கனைகள் இதற்கு முன்னதாக ஆடிய போட்டியில் நவோமி ஒசாகா வென்றிருந்தார். எனவே இன்று ஒசாகாவுக்கு பதிலடி கொடுக்கப்படுமா என்ற கேள்வியும் இருந்தது.
இந்தநிலையில் இன்று நடந்த முதல் செட் ஆட்டத்தில் தொடக்கம் முதலே கோகோ ஆக்ரோஷமாக ஆட, நவோமி முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் பறிகொடுத்தார். இதனால் நவோமியின் ஆட்டத்தில் சிறிது மந்தம் ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட கோகோ காஃப், இரண்டாவது செட் முதல் புள்ளியை வேகமாக கைப்பற்றினார். பின்னர் ஒசாகா மீண்டும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் புள்ளியைப் பெற, கோகோ 2-1 என முன்னிலைப்பெற்றார்.