தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யு.எஸ் ஓபன் : சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் ஓசாகா! - யூ.எஸ்.ஓபன்

நியூயார்க் : யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Naomi Osaka clinches 2nd US Open title, registers comeback win over Azarenka in final
Naomi Osaka clinches 2nd US Open title, registers comeback win over Azarenka in final

By

Published : Sep 13, 2020, 12:40 PM IST

Updated : Sep 13, 2020, 4:40 PM IST

அமெரிக்காவில் நடைபெற்று வரும் யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (செப்.13) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, பெலாரஸின் விக்டோரியா அஸரெங்காவை எதிர்த்து விளையாடினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டதின் முதல் செட்டை அஸரென்கா 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஒசாகாவிற்கு அதிர்ச்சியளித்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஒசாகா 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டைக் கைப்பற்றி தோல்வியைத் தவிர்த்தார்.

யூ.எஸ்.ஓபன்: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் ஓசாகா

பின்னர் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட ஒசாகா 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

கோப்பையுடன் ஒசாகா

இதன்மூலம் யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இது நவோமி ஒசாகா வெல்லும் இரண்டாவது யு.எஸ் ஓபன் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கேகேஆர் அணியின் புது வரவாக அமெரிக்க வீரர்!

Last Updated : Sep 13, 2020, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details