2020ஆம் ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான ஆட்டங்களில் நட்சத்திர வீரர்கள் நடால், வாவ்ரிங்கா, டாமினிக் தீம் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னெறியுள்ளனர்.
முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் நடாலை எதிர்த்து பொலிவியா வீரர் ஹுயூகொ டெலியன் ஆடினார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய நடால் 6-2, 6-3,6-0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதையடுத்து ஆஸ்ட்ரிய வீரர் டாமினிக் தீமை எதிர்த்து ரஷ்ய வீரர் ஏட்ரியன் மன்னரினோ ஆடினார். அதில் 6-3,7-5, 6-2 என்ற செட்களில் டாமினிக் தீம் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
இதேபோல் ஸ்விஸ் நட்சத்திர வீரர் ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்த்து போஸ்னியாவின் தமிர் (Damir) ஆடினார். எதிர்பார்ப்பின்றி நடந்த இந்தப் போட்டி, ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. வாவ்ரிங்கா எளிதாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் செட்டை 7-5 என வாவ்ரிங்கா கைப்பற்ற, இரண்டாவது செட் ஆட்டத்தில் தமிர் அட்டகாசமாக ஆடினார்.
இரண்டாவது செட் ஆட்டம் டை ப்ரேக்கர் வரை சென்ற நிலையில், 7-4 என்று டை ப்ரேக்கரில் வெற்றிபெற்று இரண்டாவது செட்டையும் தமிர் கைப்பற்ற ஆட்டம் பரபரப்பானது. இதையடுத்து நடந்த மூன்றாவது செட் ஆட்டத்தை வாவ்ரிங்கா கவனமாக ஆட, 6-4 எனக் கைப்பற்றினார். பின்னர் நடந்த நான்காவது செட் ஆட்டத்தில் 6-4 எனக் கைப்பற்றி வாவ்ரிங்கா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதையும் படிங்க: 15 வயது வீராங்கனையிடம் வீழ்ந்த வீனஸ் வில்லியம்ஸ்!