தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டென்னிஸ் வீரர் நடாலுக்கு கரோனா - Rafael Nadal health

அபுதாபியிலிருந்து ஸ்பெயின் திரும்பிய டென்னிஸ் வீரர் நடாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டென்னிஸ் வீரர் நடாலுக்கு கரோனா
டென்னிஸ் வீரர் நடாலுக்கு கரோனா

By

Published : Dec 20, 2021, 9:38 PM IST

மாட்ரிட்: இதுகுறித்து நடால் தனது ட்விட்டர் பக்கத்தில், "அபுதாபியிலிருந்து ஸ்பெயின் திரும்பிய பிறகு, லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், கரோனா பரிசோதனை செய்தேன். அதன் முடிவில், கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவைத், அபுதாபியில் இரு நாள்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்தேன். அப்போது எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. வரும் நாள்களில் போட்டிகளில் கலந்துகொள்வது குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் நீண்ட நாள்களுக்கு அபுதாபியில் நடந்த கண்காட்சிப் போட்டியில் நடால் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உலக பேட்மிண்டன் கூட்டமைப்பில் சிந்து

ABOUT THE AUTHOR

...view details