டென்னிஸ் விளையாட்டின் மிகவும் பிரபலமான தொடரான பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி ரசிகர்களை பரபரப்பின் உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில், உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனுடன் மோதினார்.
வழக்கம்போல் இப்போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஸ்வார்ட்ஸ்மேனுக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நடால், 6-3, 7-6 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்களைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம், ரஃபேல் நடால் 6-3, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை வீழ்த்தி, 13ஆவது முறையாக பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2020: ராஜஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு!