இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் கலிஃபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி போட்டிகள் முடிவடைந்து அரையிறுதி போட்டிகள் தொடங்குகின்றன. இதன் காலிறுதி போட்டியில், ஸ்பெயின் நட்சத்திர வீரர் நடால் ரஷ்யாவின் கச்சனோவை எதிர்த்து ஆடினார். இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய நடால் 7-6, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
டென்னிஸின் தல - தளபதி மோதும் அரையிறுதி! - ரோஜர் ஃபெடரர் - ரஃபேல் நடால்
கலிஃபோர்னியா : இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைறுதி போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் - ஸ்பெயினின் ரஃபேல் நடால் மோதுகின்றனர்.
சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் - ஸ்பெயினின் ரஃபேல் நடால்
மேலும், மற்றொரு காலிறுதி போட்டியில், சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரை போலந்தின் ஹர்காக்ஸ் எதிர்த்தார். அதில், 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.இந்நிலையில், இருவருக்குமான அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. டென்னிஸின் தல - தளபதியாக கருதப்படும் நடால் - ஃபெடரர் மோதும் போட்டி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.