தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டேவிஸ் கோப்பை: ஆறாவது முறையாக ஸ்பெயின் அணி சாம்பியன்! - ரஃபேல் நடால், பாடிஸ்டா அகுட் தலைமையிலான ஸ்பெய்ன் அணி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் கனடா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

Davis Cup Title For Spain

By

Published : Nov 25, 2019, 10:01 AM IST

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையிலான அணிகளுடன் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி போட்டியில், ரஃபேல் நடால், பாடிஸ்டா அகுட் தலைமையிலான ஸ்பெயின் அணி, டெனிஸ் ஷாபோலோவ், ஃபெலிக்ஸ் ஆகர் - அலியாஸிம் தலைமையிலான கனடா அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தின் முதல் போட்டியில் தனது தந்தை மரணத்திற்குப் பிறகு, கலந்து கொண்ட ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் பாடிஸ்டா அகுட், கனடாவின் ஃபெலிக்ஸ் அகரை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அகுட் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் அகரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

பாடிஸ்டா அகுட் - ஃபெலிக்ஸ் ஆகர்-அலியாஸிம்

இதன் மூலம் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால், கனடாவின் டெனிஸ் ஷாபோலோவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் நடால் முதல் செட்கணக்கை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி, ஷாபோலோவிற்கு அதிர்ச்சியளித்தார். அதன் பின் நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இரு நாட்டு வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை சென்றது.

ரஃபேல் நடால் - டெனிஸ் ஷாபோலோவ்

அதன்பின் டை பிரேக்கரில் ரஃபேல் நடால் 7-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார். இதன் மூலம் உலகின் முன்னணி வீரரான ரஃபேல் நடால் 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் ஷாபோலோவை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டியில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் கனடாவை வீழ்த்தி, ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதையும் படிங்க: ஒரே நாளில் இரண்டு போட்டிகள்; இறுதிப் போட்டிக்கு முன்னேறி கிளாடியேட்டர்ஸ் அசத்தல்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details