பரபரப்பாக நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று (அக். 07) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடால், இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொண்டார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நடால் முதல் செட்டை 7-6 என டைபிரேக்கர் முறையில் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்ட நடால் இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 6-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி சின்னருக்கு அதிர்ச்சியளித்தார்.