விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நடப்பெற்ற போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில், ஸ்பெயின் நட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஜப்பானின் யுச்சி சுகிதாவை 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
உலகின் 2ம் நிலை வீரரான ரஃபேல் நடால் இந்த வெற்றியின் மூலம் நேரடியக விம்பிள்டன் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
முதல் சுற்றில் வெற்றி பெற்றார்கள் ரபேல் நடால் மற்றும் ஃபெடரர். மற்றொரு அட்டத்தில் உலகின் 3ம் நிலை வீரரும் 8 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவருமான சுவிஸ் நட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த லாயிட் ஹாரிஸை எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டை லாயிட் ஹாரிஸ் 6-3 என்ற செட்கணக்கில் கைப்பற்றினார். அதன் பின் ஃபெடரர் தனது அபார ஆட்டத்தால் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ரோஜர் ஃபெடரர் தனது 9 வது விம்பில்டன் பட்டத்தை நோக்கி அடியெடுத்து வைதுள்ளார்.