பிரிட்டன் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே, இதுவரை ஒற்றையர் பிரிவில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதையடுத்து, காயம் காரணமாக, இந்த ஆண்டு ஜனவரியில் தான் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின்னர், ஆடவர் இரட்டையர் பிரிவில் மட்டுமே பங்கேற்று வந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு காரோலினாவில் வின்ஸ்டன் - சேலம் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் முர்ரே பங்கேற்றார்.
கம்பேக் கொடுக்க தடுமாறும் ஆண்டி முர்ரே - Andy Murray singles
வின்ஸ்டன் - சேலம் ஏடிபி டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் பிரிட்டன் நாட்டின் நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரே தோல்வியடைந்துள்ளார்.
Andy Murray
இதையடுத்து, இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியில் அவர் அமெரிக்காவின் டெனீஸ் சான்ட்கிரேனை (Tennys sandgren) எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முர்ரே 6-7, 5-7 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். இதன்மூலம், ஒற்றையர் பிரிவில் அவர் நல்ல கம்பேக் கொடுக்க தடுமாறுவது பொதுவெளிக்கு வந்துள்ளது.