தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: 2ஆவது முறையாக வாகை சூடிய பபூஸ் - கிறிஸ்டினா இணை - women's doubles champions Mladenovic and Babos

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பபூஸ் - கிறிஸ்டினா இணை கைப்பற்றியது.

mladenovic-and-babos-crowned-womens-doubles-champions-at-australian-open
mladenovic-and-babos-crowned-womens-doubles-champions-at-australian-open

By

Published : Jan 31, 2020, 6:36 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஹங்கேரியின் பபூஸ் - ஃபிரான்ஸின் கிறிஸ்டினா இணையை எதிர்த்து தைவானின் சூ வெய் - செக் குடியரசின் பார்பொரா ஸ்ட்ரிகோவா இணை எதிர்த்து ஆடியது.

இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய பபூஸ் - கிறிஸ்டினா இணை முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் 6-1 என மீண்டும் பபூஸ் - கிறிஸ்டினா இணை கைப்பற்றி ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் இரட்டையர் பட்டத்தை வென்றது.

பபூஸ் - கிறிஸ்டினா இணை

இந்த இணை 2018ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவின் பட்டத்தை ஏற்கனவே கைப்பற்றியதால், இது ஆஸ்திரேலியன் ஓபன் தொடரைக் கைப்பற்றுவது இரண்டாவது முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் 2019ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் தொடரின் அரையிறுதியில் அடைந்த தோல்விக்கு பபூஸ் - கிறிஸ்டினா இணை பதிலடி கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: நடாலிடம் அனுமதிச்சீட்டு கேட்ட காவலாளி!

ABOUT THE AUTHOR

...view details