இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்டென்னிஸ் தொடர் கலிஃபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், கனடா வீரர் மிலாஸ் ரோனிக்கை எதிர்த்து செர்பியாவின் கெமனோவிக் ஆடினார்.
அரையிறுதியில் கனடா வீரர் மிலாஸ் ரோனிக்! - மியோமிர் கெமனோவிக்
கலிஃபோர்னியா: இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் மியோமிர் கெமனோவிக்கை வீழ்த்தி கனடா வீரர் மிலாஸ் ரோனிக் அரையிறுதிக்குள் கால் பதித்துள்ளார்.

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய மிலோஸ்
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் காலிறுதிப் போட்டியில், ஆட்டம் தொடங்கியது முதலே அபாரமாக ஆடிய கனடாவின் மிலாஸ் ரோனிக், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்ற, தொடர்ந்து தாக்குதல் ஆட்டம் ஆடிய ரோனிக் இரண்டாவது செட்டை 6-4 என வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.