தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மியாமி ஓபன் டென்னிஸ் : க்விட்டோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லி பார்டி! - ashleigh barty

ப்ளோரிடா : மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் குவிட்டோவாவை வீழ்த்திய ஆஷ்லி பார்டி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

ஆஷ்லி பார்டி

By

Published : Mar 27, 2019, 3:50 PM IST

2019 ஆம் ஆண்டுக்கான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் ப்ளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் செக் குடியரசு வீராங்கனை க்விட்டோவாவை எதிர்த்து ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி மோதினார்.

இந்த போட்டியில், இருநட்சத்திர வீராங்கனைகள் மோதியதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

இதனையடுத்து முதல் செட்டில், இருவீராங்கனைகளும் அபாரமாக ஆடினர். முதல் செட்டை ஆஷ்லி பார்டி 7-6 என கைப்பற்றினார். பின்னர் இரண்டாவது செட்டை விழிப்புடன் ஆடிய க்விட்டோவா 6-3 என கைப்பற்ற, வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாது செட் ஆட்டம் ரசிகர்களை பரபரப்பாக்கியது.

க்விட்டோவா - ஆஷ்லி பார்டி

மூன்றாவது செட் ஆட்டம் தொடங்கியது முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லி பார்டி 6-2 என கைப்பற்றி க்விட்டோவாவை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஆஷ்லி பார்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மேலும், அரையிறுதிப் போட்டியில் 23 வயதாகும் அனெட் கோண்டவெயிட்டை எதிர்கொள்கிறார் ஆஷ்லி பார்டி.



ABOUT THE AUTHOR

...view details