மியாமி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஃபுளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றில், முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், அர்ஜெண்டினாவை சேர்ந்த ஃபெடரிகோ டெல்போனிஸை எதிர்கொண்டார்.
டென்னிஸ்: நான்காம் சுற்றுக்கு போராடி முன்னேறிய ஜோகோவிச்! - ஜோகோவிச்
ஃபுளோரிடா: மியாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், முதல் நிலை வீரர் ஜோகோவிச், அர்ஜெண்டினாவின் ஃபெடரிகோ டெல்போனிஸை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் முதல் செட்டில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இறுதியில், ஜோகோவிச் 7-5 என்ற கணக்கில் ஃபெடரிகோவை போராடி வீழ்த்தினார். பின்னர், நடைபெற்ற இரண்டாம் செட்டில் ஃபெடரிகோவின் மிரட்டலான ஆட்டத்தில் வீழ்ந்த ஜோகோவிச், 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில், தனது அனுபவமான ஆட்டத்தை வெளிபடுத்திய கோகோவிச் 6-1 என்ற கணக்கில் லாவகமாக கைப்பற்றினார். இறுதியில், ஜோகோவிச் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள நான்காம் சுற்றில், ஜோகோவிச், ஸ்பெயினின் பவ்டிஸ்டா அகட் உடன் மோதவுள்ளார்.