தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மியாமி ஒபன்: சிமோனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிளிஸ்கோவா! - K.Pliskova in final

புளோரிடா: மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில், சிமோனா ஹாலப்பை வீழ்த்தி கரோலினா பிளிஸ்கோவா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பிளிஸ்கோவா

By

Published : Mar 29, 2019, 2:22 PM IST

2019ஆம் ஆண்டுக்கான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் புளோரிடாவில் நடைபெற்றுவருகின்றன. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனைகள் சிமோனா ஹாலப் - பிளிஸ்கோவா மோதினர்.

தரவரிசைப் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருக்கும் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலப்பை ஏழாவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் பிளிஸ்கோவா எதிர்த்து ஆடியதால் ரசிகளிடையே எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் இவ்விரு வீராங்கனைகளும் இதுவரை மோதிய 9 போட்டிகளில் 7இல் சிமோனா ஹாலப்பும், இரண்டில் பிளிஸ்கோவாவும் வென்றுள்ளனர்.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு வீராங்கனைகளும் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை 7-5 என செக் குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா அபாரமாகக் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் சிறப்பாக ஆடிய பிளிஸ்கோவா 5-0 என வேகமாக முன்னேறி சிமோனாவுக்கு அதிர்ச்சியளிக்க, பின்னர் இறுதியாக 6-1 என இரண்டாவது செட்டை கைப்பற்றிய பிளிஸ்கோவா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

சிமோனாவை வீழ்த்திய பிளிஸ்கோவா

இறுதிப் போட்டியில், பிளிஸ்கோவாவை எதிர்த்து ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ஆடவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details