2019ஆம் ஆண்டுக்கான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் ஃபுளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க நேரப்படி நேற்று நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி (Ashleigh Barty), செக் குடியரசின் காரோலினா பிலிஸ்கோவாவை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் முதல் செட்டில் இவ்விரு வீராங்கணைகளும் தலா 6 புள்ளிகளைப் பெற்றனர். இதனால், அந்த செட்டின் வெற்றியாளரை தீர்மானிக்கும் டைபிரேக்கர் போட்டி நடைபெற்றது. இதில், ஆதிக்கம் செலுத்திய பார்டி 7-1 என்ற கணக்கில் புள்ளிகளைப் பெற்றதால், முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் வென்றார்.