மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுப் போட்டிகள் இன்று (பிப். 15) நடந்துவருகின்றன. இதில் உலகின் நான்காம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியின் தொடக்கத்திலிருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டையும், 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி மெக்டொனால்டிற்கு அதிர்ச்சியளித்தார்.