ViennaOpen: வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இத்தாலியைச் சேர்ந்த பெரெட்டினி, ரஷ்யாவின் ஆண்ட்ரே ருப்லேவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெரெட்டினி 7-5, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் ஆண்ட்ரே ருப்லேவை வீழ்த்தி வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார்.
நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதிச்சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஸ்பெயினின் பப்லோ கரேனோ புஸ்டாவை எதிர்த்து விளையாடினார். ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஸ்டா காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து வெளியேறினர்.
இதன்மூலம் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெறவுள்ள அரையிறுதிச் சுற்றில் நட்சத்திர வீரர்களான பெரெட்டினியை எதிர்கொள்கிறார் டொமினிக் தீம். இதில் யார் வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்ற எதிர்பார்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஜாம்பவான் வீரர்களை வீழ்த்த வேண்டும்: ஸ்வரெவ்!