2019ஆம் ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. களிமண் தரை ஆடுகளத்தில் ஆடப்படும் தொடர், நடைபெறவுள்ள பிரஞ்ச் ஓபன் போட்டிகளுக்கு சிறந்த பயிற்சியாக அமையும் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர்: 3ஆவது சுற்றுக்கு முன்னேறிய ஃபெடரர்! - Federer
மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ஃபிரான்ஸ் நாட்டின் ரிச்சர்டை வீழ்த்தி ஸ்விஸ் நட்சத்திர வீரர் ஃபெடரர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மாட்ரிட்
இதில் மூன்றாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்விஸ் நட்சத்திர வீரர் ஃபெடரரை எதிர்த்து பிரான்ஸ் நாட்டின் ரிச்சர்ட் விளையாடினார். ஃபெடரர் மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு இந்த தொடரில் பங்கேற்றுள்ளதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஃபெடரர் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி எளிதாக வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 52 நிமிடங்கள் வரை நீடித்தது.