அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் நடைபெற்ற சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் மகளிர் இறுதி போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷ்யாவின் குஸ்னெட்சோவாவை எதிர்கொண்டார்.
சின்சினாட்டி டென்னிஸ்: வெற்றிவாகை சூடினார் மேடிசன் கீஸ்! - tennis
ஓகியோ: சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை வீழ்த்தி மேடிசன் கீஸ் வெற்றிவாகை சூடினார்.
madison keys
சுவாரஸ்யமான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்னெட்சோவாவை வீழ்த்தி மேடிசன் வெற்றிபெற்றார். அதன் பின்னும் தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்திய மேடிசன் கீஸ் 7-6 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்னெட்சோவாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.
இதன்மூலம் 7-5, 7-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை வீழ்த்தி தனது முதல் சின்சினாட்டி டென்னிஸ் கோப்பையை வென்றுள்ளார் மேடிசன் கீஸ்.