2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - லாட்வியாவின் ஜெலனா இணை இன்று இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஆடியது. இந்த இணையை இங்கிலாந்தின் ஜாமி முர்ரே - அமெரிக்காவின் பெதானி இணை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜாமி முர்ரே இணை முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றின. இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தைக் கைப்பற்ற இரு இணைகளும் போராடின. இறுதியாக ஜாமி முர்ரே இணை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றன.