கிராண்ட் பிரிக்ஸ் ஹாசன் ஏடிபி டென்னிஸ் தொடர் மொராக்கோவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பயஸ், பிரான்சின் பெனாய்ட் இணை, ஆஸ்திரேலியாவின் ஆலிவர், பிலிப் ஜோடியை எதிர்கொண்டது.
ஏடிபி டென்னிஸ்: அரையிறுதியில் பயஸ் இணை - டென்னிஸ்
மொராக்கோ: கிராண்ட் பிரிக்ஸ் ஹாசன் ஏடிபி டென்னிஸ் தொடரில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரான்சின் பெனாய்ட் இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அரையிறுதியில் பயஸ் இணை
முதல் செட்டில் சிறப்பாக ஆடிய பயஸ் இணை 7-5 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் செட்டில் 3-6 என்ற கணக்கில் பயஸ் இணை தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் முறையாக சூப்பர் டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில், கடுமையாக ஆட்டத்தை வெளிபடுத்திய பயஸ் இணை 12-10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பயஸ் இணை 7-5, 3-6, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.