தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அஸ்வினைப்போன்று சர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர்! - நிக் கிரிஜியோஸ்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரிஜியோஸ், அண்டர் ஆர்ம் முறையில் சர்வீஸ் செய்ததை பல விளையாட்டு விமர்சகர்களும், கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.

நிக் கிரிஜியோஸ்

By

Published : Mar 27, 2019, 1:26 PM IST

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதில், உலகின் முன்னணி வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தத்தொடரில் நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்நடைபெற்ற மூன்றாவது சுற்றுப்போட்டியில் நிக் கிரிஜியோஸ், செர்பிய வீரர் டஸன் லஜ்ஜோவிக்கை எதிர்கொண்டார். அப்போது கிரிஜியோஸ் இரண்டு முறை அண்டர் ஆர்ம் சர்வீஸ் செய்தார்.

முதல் முறை அவர் செய்த அண்டர் ஆர்ம் சர்வீஸை லஜ்ஜோவிக் விட்டுவிட்டார். ஆனால் அடுத்த முறையாக செய்யப்பட்ட அண்டர் ஆர்ம் சர்வீஸை அவர் எதிர்த்து ஆடினார். எனினும் அப்போட்டியில், நிக் கிரிஜியோஸ் 6-3, 6-1 என்ற நேர்செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

டென்னிஸ் போட்டிகளின்விதிகளின் படி அண்டர் ஆர்ம் சர்வீஸ் செய்யலாம் என்ற விதி இருந்தாலும், அதுபோன்ற சர்வீஸ்களை எந்த வீரரும் செய்வதில்லை. காரணம் டென்னிஸ் போட்டிகளில் செய்யப்படும் சர்வீஸ்கள் மணிக்கு 100கிமீ வேகத்தில் இருக்கும். அதை எதிர்த்து ஆடுவதையே டென்னிஸ் வீரர்கள் சிறந்ததாகக் கருதுகின்றனர்.

எனவே இதுபோன்ற சர்வீஸ்கள் விளையாட்டின் மதிப்பை குறைத்துவிடுகின்றன என்று பல விளையாட்டு விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். நிக் கிரிஜியோஸ் நேற்று நடைபெற்ற நான்காவது சுற்றில் குரோஷிய வீரர் போர்னா கோரிக்கிடம் 4-6, 6-3, 6-2 என்ற செட்களில் தோல்வியடைந்தார். இதனால் அவர் மியாமி தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேபோன்று கிரிக்கெட்டில் முதன்முறையாக அண்டர் ஆர்ம் முறையில் பந்து வீச்சில் ஈடுப்பட்டதும் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1981ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் டிரெவோர் சாப்பல் அண்டர் ஆர்ம் முறையில் பந்துவீசினார். அது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்சையை கிளப்பியதையடுத்து, அதுபோன்று பந்துவீசும் முறைக்கு ஐசிசி தடை விதித்தது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது, பஞ்சாப் அணியின் கேப்டனான அஸ்வின், எதிரணியின் பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒரே வாரத்தில் இரண்டு விதமான விளையாட்டுகளில் நடந்த இருவேறு நிகழ்வுகளும் விதிகளின்கீழ் நடைபெற்றாலும், ஸ்போர்ட்மேன்ஷிப்பை குறைக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details