உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பால் நடத்தப்படும் டபுள்யூ.டி.ஏ. ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் தற்போது சீனாவின் சென்ஷென் நகரில் நடைபெற்றுவருகிறது. உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதல் பத்து இடங்களில் உள்ள வீராங்கனைகளுக்காக நடத்தப்படும் இந்தத் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதனிடையே உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த் ஆஷ்லி பார்ட்டி, இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜப்பானின் நவோமி ஒசாகா (மூன்றாவது ரேங்க்) ஆகியோர் இன்று நடைபெறவிருந்த போட்டியில் மோதுவதாக இருந்தது. ஆனால் நவோமி ஒசாகா காயம் காரணமாகப் பாதியிலேயே வெளியேறியதால் அவருக்குப் பதிலாக இப்போட்டியில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் (10ஆவது ரேங்க்) களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.