தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஃபெட் கப்: செவஸ்டோவாவை வீழ்த்திய ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன்! - ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன் சோஃபியா கெனின்

அமெரிக்க அணிக்காக ஃபெட் கப்பில் களமிறங்கிய ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன் சோஃபியா கெனின் முதல் போட்டியில் வெற்றிபெற்றார்.

kenin-tops-sevastova-6-2-6-2-in-fed-cup
kenin-tops-sevastova-6-2-6-2-in-fed-cup

By

Published : Feb 8, 2020, 3:09 PM IST

தேசிய அணிகளுக்கான 2020ஆம் ஆண்டின் மகளிர் ஃபெட் கப் தொடர் தொடங்கியுள்ளது. அதன் நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்ற அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனினை எதிர்த்து லாட்வியாவின் செவஸ்டோவா ஆடினார்.

ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன் சோஃபியா கெனின்

இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் சோஃபிய கெனின் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி 1-0 என்று முன்னிலைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து சோஃபியா கெனின் பேசுகையில், ''ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலிருந்து நேரடியாக இந்தத் தொடரில் பங்கேற்பது சிறிது பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றி எனது ஆட்டத்தில் கவனம் செலுத்த உதவியிருக்கிறது'' என்றார்.

இதையும் படிங்க: கிங் இஸ் பேக்... நோவாக் ஜோகோவிச்!

ABOUT THE AUTHOR

...view details