ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் திவிஜ் சரண், நியூசிலாந்தின் ஆர்டெம் சீதக் இணை பிரான்சின் ரோஜர்-வாஸ்ஸலின், நிக்கோலஸ் மஹூத் இணையை எதிர் கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிரான்சின் ரோஜர் இணை 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் இந்தியாவின் சரண் இணையை வீழ்த்தி ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது.