தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

12 ஆண்டுகளுக்கு பின், ஏடிபி கோப்பை வென்ற இளம் வீரர்! - ஜானிக் சின்னர் - வெசக் பாஸ்பிசில்

சோஃபியா ஓபன் டென்னிஸ் தொடரில் இளம் வீரர் ஜானிக் சின்னர் கோப்பையை வென்ற நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் ஏடிபி கோப்பையை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

jannik-sinner-youngest-in-12-years-to-win-atp-title
jannik-sinner-youngest-in-12-years-to-win-atp-title

By

Published : Nov 15, 2020, 3:38 PM IST

சோஃபியா ஒபன் டென்னிஸ் தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் - கனடாவின் பாஸ்பிசில் ஆகியோர் ஆடினார். இதன் முதல் செட்டை ஜானிக் சின்னர் 6-4 என்று கைப்பற்றிய நிலையில், இரண்டாம் செட்டை 3-6 என பாஸ்பிசில் கைப்பற்றினார்.

இதனால் ஆட்டத்தின் மூன்றாம் செட் பரபரப்பானது. இதில் தொடக்கம் முதலே இரு வீரர்களும் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டம் டை ப்ரேக்கருக்கு சென்றது.

அதில் ஜானிக் சின்னர் 7-3 என்ற புள்ளிகளில் வெற்றிபெற, மூன்றாவது செட்டை 7-6 என்ற கணக்கில் ஜாக் சின்னர் கைப்பற்றினார். இதன்மூலம் முதல்முதலாக சோஃபியா ஓபன் டென்னிஸ் தொடரைக் கைப்பற்றினார்.

மேலும் 2008ஆம் ஆண்டு ஜப்பான் வீரர் கை நிஷிகோரி 18 வயதில் ஏடிபியின் டெல்ரே பீச் ஓபன் தொடரை 2008ஆன் ஆண்டு கைப்பற்றியிருந்தார். இதையடுத்து 12 ஆண்டுகளுக்கு பின், ஏடிபி தொடரை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை 19 வயதில் ஜானிக் சின்னர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க:கோலியை ரசிக்கவும் செய்கிறார்கள்... வெறுக்கவும் செய்கிறார்கள்: டிம் பெய்ன்...!

ABOUT THE AUTHOR

...view details