கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரபல டென்னிஸ் தொடரான இத்தாலியன் ஓபன் தொடர் அந்நட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று (செப்.20) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், நோர்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்த்து விளையாடினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் அதிரடியை வெளிப்படுத்திய அவர், 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி காஸ்பருக்கு அதிர்ச்சியளித்தார்.