தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இத்தாலியன் ஓபன் 2020: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய ஹாலெப்! - ரொமேனியாவின் சிமோனா ஹாலெப்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரொமேனியாவின் சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Italian Open 2020: Simona Halep wins first title in Rome after Karolina Pliskova
Italian Open 2020: Simona Halep wins first title in Rome after Karolina Pliskova

By

Published : Sep 21, 2020, 8:26 PM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரபல டென்னிஸ் தொடரான இத்தாலியன் ஓபன் தொடர், இத்தாலியின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற (செப்.21) மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் ரொமேனியாவின் சிமோனா ஹாலெப், செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவாவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் ஹாலெப் கைப்பற்றி அசத்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டவாது செட் ஆட்டத்தின் போது காயம் காரணமாக கரோலினா ப்ளிஸ்கோவா போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் மூலம் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரொமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-0, 2-1 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா ப்ளிஸ்கோவாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

மேலும் சிமோனா ஹாலெப் தனது முதல் இத்தாலியன் ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இத்தாலியன் ஓபன் 2020: இறுதிச்சுற்றில் ஜோகோவிச்!

ABOUT THE AUTHOR

...view details