டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றது. இதில், ஆசிய ஓசேனியா குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை உலகத் தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதையடுத்து நேற்றிரவு நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து செய்தியாளர்களுடன் பயஸ் பேசுகையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. எங்கள் கேப்டன் ரோஹித் ராஜ்பால் மிகவும் சிறப்பாக அணியை ஒருங்கிணைத்துள்ளார் என்றார்.