பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஃபிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா இணை அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிஸ்ட் இணையை எதிர்கொண்டனர்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் போபண்ணா இணை முதல் செட் கணக்கை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் போபண்ணா இணை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்டின் இணைக்கு அதிர்ச்சியளித்தது.