தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜூனியர் பிரஞ்ச் ஓபன் ஒற்றையர் பிரிவுக்கு தகுதி பெற்ற தேவ் ஜாவியா! - ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்று

ஜூனியர் பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் தேவ் ஜாவியா தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

India's Dev Javia qualifies for the Roland-Garros Junior singles draw
India's Dev Javia qualifies for the Roland-Garros Junior singles draw

By

Published : Oct 9, 2020, 10:00 PM IST

ஜூனியர் பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் வைல்டுகார்டு பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தேவ் ஜாவியா, பிரேசிலிஸ் நிக்கோலஸ் மார்கொன்டஸை எதிர்கொண்டார்.

பரப்பரப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை நிக்கோலஸ் 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஜாவியாவிற்கு அதிர்ச்சியளித்தார். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஜாவியா, இரண்டாவது செட்டை 6-1 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 10-04 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம் வைல்டுகார்டு சுற்றில் இந்தியாவின் தேவ் ஜாவியா 0-6, 6-1, 10-04 என்ற செட் கணக்கில் பிரேசிலின் நிக்கோலஸ் மார்கொன்டஸை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மேலும், இந்தியா சார்பில் ஜூனியர் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய இரண்டாவது நபர் என்ற சாதனையையும் படைத்தார்.

இதற்கு முன்னதாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் வைல்டு கார்டு சுற்றில் இந்தியாவின் அபிமன்யூ வென்னெம்ரெட்டி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிரஞ்ச் ஓபன்: இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக் - கெனின்!

ABOUT THE AUTHOR

...view details